ஒவ்வொரு நாளும் மண்ணை கிளராது அன்று உணவில்லை என்ற நிலையில் வாழும்
ஏழை விவசாயிகளின் கடனுக்காக, அவன் பூட்டும் ஏரையும், டிராக்டரையும், ஆடு
மாடுகளையும் ஜப்தி செய்யும் இந்த அரசாங்கம், விமான நிறுவனம் நடத்தி அதற்கு
2200 கோடி கடன் வைத்து இப்போது கட்ட இயலாது என்று கையை விரிக்கும் விஜய்
மல்லையாவிடம் ஆணிபுடுங்காதது ஏன்? இவ்வளவுக்கும் ஆண்டுதோறும் உலகின்
மிகச்சிறந்த அழகிகளை, பல நூறு கோடி செலவு செய்து, ஆடையேதும் இல்லாது படம்
பிடித்து காலெண்டர் போடும் பந்தா என்ன? தன் சொந்த F1 கார் ரேசை காலையில்
இத்தாலியில் பார்த்துவிட்டு மாலையே பெங்களூரில் தன் கிரிக்கெட் அணியின்
ஆட்டத்தை பார்க்க பறக்கும் பகட்டென்ன? அவனுக்கு காட்டும் கருணையை உண்ண
வழியின்றி தவிக்கும் விவசாயிக்கு காட்ட தயங்குவதேன்? ...ஹிட்லரை போல இப்படி
செய்துவிடலாமே! சமூகத்திற்கு பலனற்ற ஏழை, ஊனமுற்றோர், வயோதிகர், விவசாயி
எல்லோரையும் ஒழித்துவிட்டு இந்த தேசத்தை மல்லையா போன்ற பெரும்
செல்வந்தர்களுக்கான வண்ண மயமான கேளிக்கை விடுதியாகவோ, விபச்சார விடுதியாகவோ
மாற்றலாமே? நீங்கள் அனாதையாய்விட்ட காந்தி, புத்தன் போன்றோரின்
ஆன்மாக்களும் சீக்கிரம் சாந்தி அடையும்!!!
By: சுமன் ராஜ்
No comments:
Post a Comment