Top 100 social media profile creation websites

This summary is not available. Please click here to view the post.

orkut

வாங்க கொண்டாடுவோம்!

இன்று.. ஏப்ரல் 22 - உலக புவி தினம். பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகளும், உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன.

பூமி தோன்றியதிலிருந்தே, பல்வேறு இயற்கை நிகழ்வுகள், பேரிடர்களால் பூமிக்கு ஆபத்தும் அழிவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்த பின்தான்... பூமிக்கு ஏராளமான பாதிப்புகள் பலபல பரிமாணங்களில் உருவானது.

பூமி வெப்பமடைந்து கொதித்துச் சுழலும், வளிமண்டலமும் சிதைவுற்று உயிர்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்தைத் தவிர்க்கவும் குறைக்கவும்... மக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்ய உருவானதுதான் உலகப் புவிதினம்!

உலகப் புவி தினம், 1970 முதல் ஏப்ரல் 22-ம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை அமெரிக்க செனட்டரான கேலார்ட் நெல்சன் (Gaylord Nelson) என்பவர் வசந்தகால சமகால நாளான மார்ச் 20-ஐ ஒட்டி கொண்டாட வேண்டும் என நிறுவினார்.

பூமியின் வடபகுதியில் வசந்தகால சமநாளிலும், தென்பகுதியில் இலையுதிர்வு சமகால நாளான செப்டம்பர் 21-ம் நாளும் கொண்டாடினர். பிறகு சூழல் பிரச்னை தொடர்பாக முதலில் குரல் கொடுத்த கிறித்துவ பாதிரியாரான பிரான்சிஸின் நினைவாக... அவரது பிறந்த நாளான ஏப்ரல் 22-ல் கிட்டத்தட்ட 190 நாடுகளில் புவிதினம் கொண்டாடப்படுகிறது.

இந்தப் புவி தினத்தில்... மறுசுழற்சி, மறுபயன்பாடு, தூய்மையான ஆற்றல், வெப்பம் குறைப்பதற்கான முயற்சிகளை அனைவரும் செய்ய வேண்டும்.

ஒரு சிறிய செயல் முறை: முட்டை ஓடு / மரப் பெட்டி எடுத்து, அதில் பாதியளவு மண் போடவும். அதன் மேல் புல்/ கோதுமை / கேழ்வரகு/கடுகு விதைகளைப் போட்டு, மேலே கொஞ்சம் மண் தூவவும். கொஞ்சம் நீர் விட்டு, சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும். தினமும் கொஞ்சம் நீர் ஊற்றவும். சில நாட்களில் மெலிதான பச்சைத் துளிர்கள் வளர்ந்து வரும்.

*

புவியைக் காக்க... உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை இங்கே பகிருங்களேன்!

No comments:

Post a Comment